முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் அமேசான் டெலிவிரி ரிக்சாக்கள் அறிமுகம்

0 858

மின்சாரத்தில் இயங்கக் கூடிய டெலிவிரி ரிக் ஷாக்களை அமேசான் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அண்மையில் இந்தியா வந்த அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் இந்தியாவில் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதற்கு மத்திய அரசிடன் இருந்து வெளிப்படையான வரவேற்பு கிடைக்காத நிலையில், முழுவதும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய டெலிவிரி ரிக் ஷாக்களை வீடியோ மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெஃப் பெசோஸ் அறிமுகம் செய்துள்ளார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் கார்பன் வெறியேற்றாத வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

>>https://twitter.com/i/status/1219093283265138688

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments