ரஷ்ய ஹோட்டலில் வெள்ளம் போல புகுந்த வெந்நீர்.. 5 பேர் பலி

0 1097

ரஷ்ய நாட்டில் ஹோட்டல் ஒன்றில் வெந்நீர் வெள்ளம் போல புகுந்த விபத்தில், 5 பேர் தீக்காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  

image

ரஷ்ய நாட்டின் Perm நகரில் அமைந்துள்ளது  Hotel Caramel. இது ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள சிறிய ஹோட்டல் ஆகும். இந்த ஹோட்டலில் அமைக்கப்பட்டிருந்த சுடு நீர் குழாய் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்தது. இதனால் Caramel ஹோட்டல் அறைகளுக்குள் குபுகுபுவென கொதிக்கும் தண்ணீர் உள்நுழைந்தது.

image

மழை வெள்ளம் போல புகுந்த வெந்நீர் வெள்ளத்தில் சிக்கி ஹோட்டலுக்குள் இருந்த 5 பேர் படுகாயமடைந்து பலியாகினர்.  மேலும் 3 பேர் தீக்காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக, பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத சேவைகளை வழங்கியதாக கூறி போலீசார் குற்றவழக்கு பதிவு செய்துள்ளனர்.

Also Read : அரசக் குடும்பத்தை மேகன் இழிவுபடுத்திவிட்டதாக அவரது தந்தை குற்றச்சாட்டு

Watch Polimernews Online  : https://bit.ly/35lSHIO

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments