நிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனை குற்றவாளி பவன்குமார் தாக்கல் செய்த மனுத் தள்ளுபடி

0 980

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை கைதி பவன்குமார் குப்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையிலடைக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கும், வருகிற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நால்வரில் ஒருவனான பவன்குமார் குப்தா, குற்றம்நடந்தபோது, தாம் 18 வயது பூர்த்தியாகாத சிறுவன் எனக் கூறி தாக்கல் செய்த முறையீட்டு மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்த முறையீட்டு மனுவை, இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூசன், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு, மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Watch Polimernews Online  : https://bit.ly/35lSHIO

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments