மும்பையில் 88 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குதிரைப்படை காவல் பிரிவு
மும்பையில், சுமார் 88 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குதிரைப்படை காவல் பிரிவை அறிமுகம் செய்ய மகாராஷ்ட்ர அரசு முடிவு செய்துள்ளது.
மன்னர் கால மற்றும் ஆங்கிலேயர் கால ஆட்சியின்போது இருந்த குதிரைப்படை காவல் பிரிவு, 1932ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு நவீன ஜீப்புகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட குதிரைப்படை காவலர்களை நியமிக்க முடிவுசெய்துள்ள மகாராஷ்ட்ர அரசு, வருகிற குடியரசு தின விழாவில் இருந்து அதனை அமலுக்கு கொண்டுவருகிறது.
ரோந்து பணிக்காக முதற்கட்டமாக 13 குதிரைகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : பாஜக தலைவரானார் ஜே.பி. நட்டா..!
Watch Polimer Online : https://bit.ly/35lSHIO
Comments