வாஷிங்மிஷின் டியூப்பால் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன்

0 1092

சென்னை கிண்டியில் வாஷிங்மிஷின் டியூப்பால் கழுத்தை நெறித்து மனைவியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மடுவின்கரையில் மாவு கடை நடத்தி வந்த உஷா, அதே பகுதியில் கணவர் பிரசாத், 5 வயது மகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் உஷாவை கடந்த 2 நாட்களாக செல்போனில் தொடர்புகொள்ள இயலாததால் சந்தேகமடைந்த நெல்லூரில் இருக்கும் அவரது சகோதரி, நண்பர் ஒருவரை உஷாவின் வீட்டுக்கு சென்று பார்க்க சொன்னதாக கூறப்படுகிறது.

image

அப்போது வீட்டில், உஷா உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர், போலீஸ் மற்றும் உறவினர்களுக்கு தகவலளித்தார்.

உடலைக் கைப்பற்றி தலைமறைவான கணவன் பிரசாத் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், உறவினர்களே பிரசாத்தை பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குடும்பத்தகராறில் மனைவி உஷாவை கொன்றதாக பிரசாத் ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> ஏ.சி. மெக்கானிக்கை கடத்திய 10 பேர் கொண்ட கும்பல்

Watch Polimernews Online : https://bit.ly/35lSHIO

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments