இரக்கம் இல்லையா உனக்கு.. காட்டடி அடிக்கிறாயே.! ரோஹித் சர்மாவை புகழ்ந்த சோயிப் அக்தர்

0 1898

ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், விராட் கோலியையும் அவர் தலைமையிலான இந்திய அணியையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் வெற்றிக்கு கோலி மற்றும் ரோஹித்தின் பங்கு அளப்பரியது. கோலி ஒரு விதிவிலக்கான கேப்டன். அவர் மனதளவில் மிக உறுதியானவர். தோல்வியிலிருந்து விரைவாக எப்படி மீண்டு எழுவது என்ற வித்தை அவருக்கு தெரியும்.

அவரது அணி வீரர்களும் இந்த வித்தையை தெரிந்து வைத்துள்ளனர். நடைபெற்று முடிந்துள்ள ஒருநாள் தொடர் உலகின் இரு சிறந்த ஒருநாள் அணிகளுக்கிடையேயான பெருமை மிகுந்த போர் என வர்ணித்துள்ளார் அக்தர்.

Also Read : ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்து கோலி, ரோகித் அசத்தல்..!

சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மூன்றாவது போட்டியில் சிறப்பான பேட்டிங் மூலம் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வதைத்தது என்றே கூறலாம். ஏதோ சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது போல, ஆஸ்திரேலிய அணியை அசால்ட்டாக டீல் செய்து தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா என புகழ்ந்து தள்ளியுள்ளார் அக்தர்.

அதுவும் ரோஹித் சர்மா இருக்கிறாரே அவர் வெளுத்து எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் சரியான ஷாட் அடிக்க வேண்டிய பந்து, ஷாட் அடிக்க வேண்டாத பந்து என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. காட்டடி அடிக்கிறார். இரக்கமே காட்டுவதில்லை. பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்துவிடுகிறர். இயல்பாகவே அவருக்கு இது வருகிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

கோலி மற்றும் ரோஹித்தின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி நிர்மூலமாக்கப்பட்டுள்து என அக்தர் கூறியுள்ளார்.

Also Read : நியூஸி. தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவன் இடம்பெறுவாரா ?

 Watch Polimer News Online On  : https://bit.ly/35lSHIO

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments