ரஜினி படத்திற்கு "தர்பார்" என டைட்டில் வைத்தது யார்.? பதில் கூறிய முருகதாஸ்

0 1263

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வந்த திரைப்படம் தர்பார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியிடப்பட்ட தர்பார் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் திரையிடப்பட்டு நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் தர்பார் படத்திற்கு அந்த பெயரை தேர்வு செய்தது எப்படி என முருகதாஸிடம் சமீபத்தில் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த முருகதாஸ் ரஜினி நடிக்கும் திரைப்படத்திற்கான பெயர் வைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தோம். படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருக்க கூடாது என்று தீர்மானித்தோம். அதே சமயம் வைக்கப்படும் டைட்டில் அனைத்து மொழிகளிலும் வர வேண்டும் என்று முடிவு செய்தோம்.

அந்த சமயத்தில் தான் நடிகர் ரஜினிகாந்தே இந்த திரைப்படத்திற்கு "தர்பார்" என பெயர் வைக்கலாமே என்று யோசனை தெரிவித்தார். ரஜினியின் பரிந்துரையை ஏற்று அவர் படத்திற்கு, அவர் சொன்ன தலைப்பையே வைத்ததாக கூறினார் முருகதாஸ்.

Also Read: காலாவில் நடித்த பின்னர் நான் இதற்கு அடிமையாகிவிட்டேன்.. நடிகை ஹூமா குரோஷி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments