வாட்ஸ் ஆப் செயலியின் சேவை நேற்று முடங்கியமைக்காக பயனர்களிடம் அந்நிறுவனம் வருத்தம் தெரிவிப்பு

0 787

வாட்ஸ் ஆப் செயலியின் சேவை நேற்று சில மணி நேரம் முடங்கியமைக்காக பயனர்களிடம் அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் ஆப்பின் சேவை, நேற்று மாலையில் திடீரென முடங்கியது. இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் சேவை துண்டிக்கப்பட்டதால், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்களை பரிமாற முடியாமல் பயனர்கள் கடும் திண்டாட்டத்திற்கு ஆளாகினர்.

Also Read : உலகளவில் சுமார் 3 மணி நேரம் முடங்கிய வாட்ஸ் அப் சேவை

சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் நிலைமை சரிசெய்யப்பட்டு, மீண்டும் சேவை வழங்கப்பட்டது. இந்நிலையில் சேவை துண்டிப்பால் தனது பயனர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments