சிறிய நாடான மலேசியாவால் இந்தியாவுக்கு பதிலடி தர இயலாது - மகாதீர் முகமது
பாமாயில் இறக்குமதியை நிறுத்தும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் அளவுக்கு தங்கள் நாடு பெரிய நாடு இல்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அந்த மாநிலத்தை 2ஆக பிரித்தது ஆகியவற்றை மகாதீர் முகம்மது விமர்சித்து பேசியிருந்தார். மேலும் சிஏஏ விவகாரத்திலும் இந்தியாவிற்கு எதிராக அவர் கருத்து தெரிவித்தார். இதை தவிர்க்கும்படி இந்தியா வலியுறுத்தியும் அதனை மகாதீர் கண்டுகொள்ளாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்தை தெரிவித்து வந்தார். இதையடுத்து மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய வேண்டாம் என்று வர்த்தகர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியது.
Also Read : இந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி
இதனால் மலேசியா பொருளாதார ரீதியில் பலத்த பாதிப்பை சந்தித்தது- இதுகுறித்து லங்காவியில் செய்தியாளர்களை சந்தித்த மகாதீர் முகம்மதுவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், சிறிய நாடான தங்களால் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க இயலாது என்றும், இந்த பிரச்சனையை தீர்க்க வழிகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.
Comments