மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா ஒத்திகை

0 1207

குடியரசு தின விழா முதல்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் கண்கவரும் வகையில் நடைபெற்றது.

ஒத்திகை நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் வாகன ஒத்திகை நடைபெற்றது. இதையடுத்து தேசிய கீதம் இசைக்க இந்திய விமானப்படை அதிகாரிகள் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார்கள். பின்னர் கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை,தேசிய மாணவர் படை,மத்திய தொழிலகப்படை( CISF) ஆர்பிஎப் (RPF), தமிழக காவல்துறை, தீயணைப்பு படை வீரர்கள் (FIRE SERVICE DEPARTMENT) அணிவகுத்து சென்றனர்.

தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் காவல்துறையினரின் சாகச அணிவகுப்பு ஒத்திகையும், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகையும் நடைபெற்றன.

ஒத்திகையையொட்டி, மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த கட்ட ஒத்திகை வரும் 22,23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments