பழனி முருகன் கோயிலில் மூலவர் சிலைக்கு மருந்து சாத்தப்படுவதால் நடை அடைப்பு

0 2058

பழனி முருகன் கோயில் மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி இன்று  நடைபெறுவதால், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது 4 மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

பழனி கோயிலில் கும்பாபிசேக திருப்பணிகள்   நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மூலவர் பீடத்திற்கு  13 ஆண்டுகளுக்கு பின்பு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மலைக்கோவில் சன்னதி அதிகாலை 5:30 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், பின்னர் பூஜைகளும் நடைபெற்றன.

அதன்பின்னர் மருந்து சாத்துதல் நடத்தப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக காலை 6:30 மணி முதல் காலை 10:30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Also Read : திருப்பதியில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு..!!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments