பஞ்சாப்,அரியானா மாநிலங்களில் மூடுபனி காரணமாக போக்குவரத்து பாதிப்பு

0 588

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மூடுபனி காரணமாக அமிர்தசரஸ், அம்பாலா, டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் பல பகுதிகள் பாதிப்புக்குள்ளாயின.

50 மீட்டருக்கும் குறைவாகவே பார்வைத் திறன் இருந்ததால் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கியிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி சண்டிகரில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது. இதுவழக்கத்தை விட 3 டிகிரி செல்ஷியஸ் குறைவு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதேபோல் பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் என்ற இடத்தில் மிகக் குறைவாக 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால் அப்பகுதியில் நிலவும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments