இன்று முதல் பால் விலை உயர்வு..!!
தனியார் பால் நிறுவனங்கள் நாளை முதல் பால் மற்றும் தயிர் விலை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளன.
பால் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் விற்பனை விலையை உயர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தனியார் நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன. இதனை தொடர்ந்து ஆரோக்கியா, ஹெரிடேஜ், டோட்லா நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், அர்ஜூனா நிறுவனம் லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தப்படுவதாக மொத்த விற்பனையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.
தயிர் விலையும் லிட்டர் 58 ரூபாயில் இருந்து 62 ரூபாயாக உயர்த்தப்படுவதாக கூறியுள்ளன. சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் 48ல் இருந்து 50 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் 52ல் இருந்து 56 ரூபாயாகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 60ல் இருந்து 62 ரூபாயாகவும் உயருகிறது.
Comments