உலகளவில் சுமார் 3 மணி நேரம் முடங்கிய வாட்ஸ் அப் சேவை
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், வாட்ஸ் அப் சேவை பல மணி நேரம் முடங்கியதால், அதன் பயனாளர்கள், அவதிப்பட்டனர்.
உலகின் மிகப்பெரும் தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப் பயன்பாடு, எப்போதும் உச்சத்தில் இருக்கும். இந்நிலையில், இன்று மாலை 4.15 மணியளவில், வாட்ஸ் அப்பில், புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்ப முடியாத சூழல் உருவானது.
இந்தியா, பிரேசில், மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் குறிப்பிட்ட சில மாகாணங்கள் உள்ளிட்டவற்றில் வாட்ஸ் அப் சேவை பாதிக்கப்பட்டது.
சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்னர் முழுமையாக இயங்கத் தொடங்கியது. தொழில்நுட்ப கோளாறா, அல்லது ஹேக்கர்களின் கைவரிசையா என்பது பற்றி தகவல் இல்லை.
இதற்கிடையே, வாட்ஸ் அப் டவுன் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. வாட்ஸ் அப் பயனாளர்களை கிண்டலடித்து, சிலர் டுவிட்டரில் மீம்ஸ் வெளியிட்டனர்.
Comments