காலநிலை மாற்றம், சமூக தீமைகளை எதிர்த்து 16,000 கி.மீ தூரத்திற்கு பிரம்மாண்ட விழிப்புணர்வு மனிதச் சங்கிலி
பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில், 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு, மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் தொடங்கிய மனிதச் சங்கிலி, முசாபர்பூர் உட்பட மாநிலத்தில் உள்ள பல ஊர்களிலும் நடைபெற்றது. காலநிலை மாற்றம் மற்றும் குழந்தை திருமணம் போன்ற சமூக தீமைகளை எதிர்த்து, "தண்ணீர், வாழ்க்கை, பசுமை" என்ற தலைப்பில், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், முசாபர்பூர் அருகே, அதார் கிராமத்தில், கான்டாக் ஆற்றில், படகுகளை வரிசையாக நிறுத்தி, அதில் மனிதச் சங்கிலியாக மக்கள் கை கோர்த்து நின்றது அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்தது.
Comments