பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இடைநீக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானி மீண்டும் பணியமர்த்தப்பட்டதாக தகவல்

0 604

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இடைநீக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானி, மீண்டும் பணியிலமர்த்தப்பட்டுள்ளார்.

ஏர் இந்தியா விமானி சச்சின் குப்தா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவருக்கு கீழ் பயிற்சியிலிருந்த பெண் விமானி புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அந்நிறுவனம், கடந்த ஆண்டு மே மாதம் அவரை இடைநீக்கம் செய்தது. மேலும் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி அவர் ஏர் இந்தியா வளாகத்துக்குள் நுழையவும் தடை விதித்தது.

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோரிடம் சச்சின் குப்தா மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அது குறித்து தகுந்த நேரத்தில் பரிசீலிக்கப்படும் எனவும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சச்சின் குப்தா பயிற்சியாளராக பணியமர்த்தப்பட்டுள்ளதாக மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments