தஞ்சை பெரியக்கோவிலில் கொடிமரம் செய்வதற்காக 39 அடி உயரத்தில் ஒரே மரத்திலான தேக்கு மரக்கட்டை
தஞ்சை பெரியக்கோவிலில் நடைபெறும் குடமுழக்கு விழாவினை முன்னிட்டு கொடிமரம் செய்வதற்காக 39 அடி உயரத்தில் ஒரே மரத்திலான தேக்கு மரக்கட்டை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
இக்கோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், புதிய கொடிமரம் அமைப்பதற்கு கோவில் குடமுழக்கு விழா குழு திட்டமிட்டது. இதற்காக 39 அடி உயரத்திற்கு ஒரே மரத்திலான பர்மா தேக்கு மரக்கட்டை சென்னையிலிருந்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, திருச்சுற்று பிரகாரத்தில் வைக்கப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளன.
முன்னதாக இக்கோவிலுக்கு வந்த தேக்கு மரக்கட்டையை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மற்றும் எஸ்.பி மகேஷ்வரன் ஆகியோர் குடமுழக்கு விழா குழுவினருடன் பார்வையிட்டனர்.
Comments