IPL 2021-ல் இடம் பெறுவாரா தோனி.? CSK உரிமையாளர் சீனிவாசன் பதில்

0 1250

6 மாதங்களுக்கு மேலாக சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, எப்போது வரை கிரிக்கெட் விளையாடுவார் என்ற பெரும் குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோனி கடைசியாக விளையாடினார். அதன் பிறகு இதுவரை ஒரு சர்வதேச போட்டிகளில் கூட அவர் பங்கேற்கவில்லை. ஓய்வு குறித்தும் இதுவரை அவர் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

இதனால் அவரது நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரான சீனிவாசன், நடப்பாண்டு மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர்களில் CSK அணிக்காக தோனி நிச்சயம் களமிறங்குவார் என கூறினார்.

அடுத்த ஆண்டு ஐபில் தொடருக்கான ஏலத்தில் தோனியின் பெயர் இடம்பெற்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலேயே தோனி தக்கவைக்கப்படுவார். இதில் ரசிகர்களுக்கு எந்தவித சந்தேகமும் வேண்டாம் என CSK அணியின் உரிமையாளரான சீனிவாசன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments