நாளை முதல் பக்தர்களுக்கு ஒரு இலவச லட்டு மட்டுமே வழங்கும் நடைமுறை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு இலவச லட்டு மட்டுமே வழங்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இக்கோவிலில் கடந்த 28ம் தேதி நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில், வரும் ஜனவரி 20 முதல் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு பதில் ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் அதிக லட்டு தேவைப்பட்டால் கோவிலுக்கு வெளியே உள்ள கவுண்டர்களில் 50 ரூபாய்க்கு லட்டுகள் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி லட்டுகள் விற்பனைக்காக 12 கவுண்டர்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லட்டுகள் வரை விற்பனைக்கு கொண்டு வர கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Comments