சென்னையில் நேற்று ஒரே நாளில் 15 செல்போன்கள், 5 கைப்பைகள் பறிப்பு
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உள்பட 10க்கும் மேற்பட்டோரிடம் செல்போன்கள் மற்றும் கைப்பைகளை பறித்துச் செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரூயிஸ் அலர்கான் ரவுல் என்பவர், திருவல்லிக்கேணியில் நேற்று தனது செல்போனில் வீடியோ கால் பேசிக்கொண்டே சாலையில் சென்றுகொண்டிருந்தாகவும், அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்போனை பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரூயிஸ் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர திருவல்லிக்கேணி, கோட்டூர்புரம், மீனம்பாக்கம், அம்பத்தூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் 14 செல்போன்கள், 5 கைப்பைகள் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக அந்தந்த காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Comments