ஈரான் முக்கிய தளபதி சுலைமானியின் இறுதி நொடிகளை விவரித்த டிரம்ப்
அமெரிக்க ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியின், இறுதி நொடிகளை அமெரிக்க அதிபர் விவரிக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.
அதிபர் தேர்தலை முன்னிட்டு குடியரசுக் கட்சிக்கு நிதிதிரட்டும் வகையில் நன்கொடையாளர்களுக்காக, வெள்ளிக்கிழமை இரவு தனது புளோரிடா இல்லத்தில் விருந்தளித்த அதிபர் டிரம்ப், அவர்களிடம் சுலைமானியின் இறுதி நிமிடங்களை விவரித்துள்ளார். வாஷிங்டனின் இருந்த தம்மிடம் தாக்குதலை நிகழ்த்திய ராணுவ அதிகாரி நிலவரங்களை உடனுக்குடன் தெரிவித்ததாகவும், சுலைமானியின் கார் தாக்கப்படுவதற்கு முன்பு சுலைமானி மற்றும் அவரிடம் இருப்பவர்கள் இன்னும் 2 நிமிடம் 11 விநாடிகளுக்கு மட்டுமே உயிரோடிருப்பார்கள் என அதிகாரி தெரிவித்ததாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும் இன்னும் ஒரு நிமிடம், 30 விநாடிகள், 10 விநாடிகள் என சுலைமானி தாக்கப்படும் முன்னர் அதிகாரி கூறிய கவுண்டனையும் டிரம்ப் விவரிக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.
Comments