நிர்பயா வழக்கு : தண்டனையை நிறைவேற்றும் ஹேங்மேன் தயார் நிலையில் இருக்க திகார் சிறை அறிவுறுத்தல்

0 748

நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஹேங்மேன், தயார் நிலையில் இருக்க திகார் சிறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய, 4 பேருக்கு பல தடைகளையும் தாண்டி வரும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த ஹேங்மேன் பவான் அவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற உள்ளார்.

இந்நிலையில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் ஹேங்மேன் பவான், தயார்நிலையில் இருக்குமாறு திகார் சிறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடும் பணி நிறைவடைந்தால், தனக்கும், நிர்பயாவின் பெற்றோருக்கும் நிம்மதி பெருமூச்சாக இருக்கும் என பவான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments