தலைவி திரைப்படத்தில் சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி

0 1833

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும் , அரவிந்த்சாமி எம்ஜிஆர் வேடத்திலும் நடிக்கின்றனர். இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் உற்ற தோழியான சசிகலா கதாபாத்திரத்தில், நடிகை பிரியாமணி நடிக்க போவதாக  கடந்த மாதம்  தகவல் வெளியாகி இருந்தது.

ஜெயலலிதாவிற்கு பல வருடங்களாக எல்லாமுமாக இருந்து வந்தவர் சசிகலா. அவர் மறைவு வரைக்கும் கூடவே இருந்தவர் சசிகலா. எனவே தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு உயிர் தோழியாக நடிக்க போவது யார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் தலைவி படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில், நடிகை பிரியாமணி நடித்து வருவதாகவும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக ரகசியமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் கடந்தும், நடிகை பிரியாமணியின் நடிப்பு இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

எனவே தலைவி திரைப்படத்தில் தனது நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிக்காட்டுவார் நடிகை பிரியாமணி என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments