ஈராக்கில் 250 கிலோ உடல் எடையுடைய ஐஎஸ் மதபோதகர் கைது

0 1290

ஈராக்கில் 250 கிலோ உடல் எடையுடைய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் போதகர் (ISIS Cleric) ஜப்பா தி ஜிஹாதி (Jabba The Jihadi) கைது செய்யப்பட்டு டிரக் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டான்.

சமூகவலைதளத்தில் ஈராக் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகவும், ஐஎஸ் அமைப்புக்கு கட்டுப்படாத முஸ்லிம் மத தலைவர்களை கொலை செய்யும்படி வீடியோ பதிவுகளை முப்தி அபு அப்துல் பாரி (mufti Abu Abdul Bari ) வெளியிட்டு வந்தான்.

பெருத்த உடல் உருவத்துடன் காணப்பட்ட அவன், ஜப்பா தி ஜிஹாதி என்று அழைக்கப்பட்டான். இந்நிலையில், மொசூல் நகரில் பதுங்கியிருந்த அவனை சோதனை நடத்தி ஈராக்கின் ஸ்வாட் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்ல முயன்றபோது, உடல் பருமனால் அதனுள் அவனால் வர முடியவில்லை. இதையடுத்து சிறிய அளவிலான சரக்கு வாகனம் (pickup truck) வரவழைக்கப்பட்டு, அதில் அழைத்து செல்லப்பட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments