இளவரசர், இளவரசி பட்டத்தை இனி ஹாரி தம்பதி பயன்படுத்த மாட்டார்கள்-பங்கிங்காம் அரண்மனை

0 878

இங்கிலாந்து அரசக்குடும்பத்தில் இருந்து விலகியுள்ள ஹாரி தம்பதி இனி இளவரசர், இளவரசி என்ற அரச பட்டத்தை பயன்படுத்த மாட்டார்கள் என பங்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

கடந்த 9 ஆம் தேதி அரசப் பதவிகளை துறந்து பொருளாதார ரீதியில் சுதந்திரமாக செயல்பட போவதாக ஹாரி தம்பதி அறிவித்தனர். அதை இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் பங்கிங்காம் அரண்மனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஹாரி தம்பதி இனி அரசக் கடமைகளுக்கான பொது நிதியை பெறமாட்டார்கள் என்றும் அவர்களின் செயல்கள் இங்கிலாந்து ராணியை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும் இந்தாண்டு வசந்த காலத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments