தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு எடுத்த நடவடிக்கையால் போலியோ தமிழகத்தில் ஒழிக்கப்பட்டு விட்டது என்று கூறினார்
கரூரில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் , மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் போலியோ முகாமை தொடங்கி வைத்தனர்
விழுப்புரம் மாவட்டம் கோனூரில் அமைச்சர் சிவி சண்முகம் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து சிறப்பு முகாமை தொடங்கிவைத்தார். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தனியார் மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் சத்துணவு மையங்கள் அங்கன்வாடி மையங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன. அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து தரமானதாகவும் பாதுகாப்பாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்துடனும் வழங்கப்படுவதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருரில் பொங்கல் சிறப்பு பேருந்துகளை ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போலியோ சொட்டு மருந்து முகாமையும் தொடங்கி வைத்தார். இன்று காலை கரூர் பேருந்து நிலையத்தில், நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை அவர் தொடங்கி வைத்தார். இதனிடையே பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்புவோரின் வசதிக்காக கரூரிலிருந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பேருந்துகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சிறப்பு பேருந்துகளின் கதவுகள் சரிவர இயங்குகிறதா? பேருந்துகள் நல்ல நிலையில் உள்ளனவா என ஓட்டுநர்களிடம் கேட்டறிந்த அவர், பேருந்துகளை கவனத்துடன் இயக்க அறிவுறுத்தினார்.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த அவர், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது என்றும் வீரியம் மிக்கது என்றும் பாதுகாப்பானது என்றும் கூறினார். நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்த பின் தனியார் மருத்துவமனைகளை விஞ்சும் வகையில் அனைத்து சேவைகளும் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments