இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன அதிபர் சீ ஜின்பிங்

0 802

மியான்மருக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் ஆங்-சாங்-சூகி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்த மியான்மருடன் சீனா வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட 33 புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

உள்கட்டமைப்பு பணிகளைத் துரிதப்படுத்தவும் மியானமருக்கு ஒத்துழைப்பு அளிக்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தில் மியான்மரை கடுமையாக விமர்சிப்பதற்கு சீன அதிபர் கண்டனம் தெரிவித்தார்.சிறிய நாடுகளின் உள்விவகாரங்களில் உலக நாடுகள் தலையிடுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

மியான்மர் ராணுவத் தாக்குதலுக்கு அஞ்சி சுமார் 7 லட்சம் ரோஹிங்யா முஸ்லீம்கள் அண்டை நாடான வங்காள தேசத்திற்கு அகதிகளாக புலம் பெயர்ந்தார்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments