எண்ணெய், எரிவாயுக்காக டிரில்லிங் செய்ய இனி சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை
எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அமைப்பின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதியை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் விவசாய விளை நிலங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடல்பரப்பிலும் நிலப்பரப்பிலும் டிரில்லிங் மூலம் எண்ணெய், எரிவாயு கிணறுகளை தோண்டும் நிறுவனங்கள் இதுவரை ஏ பிரிவு எனப்படும் அதிகபட்சமான சுற்றுச்சூழல் நிபந்தனைகளை கடைபிடித்து வந்தன.
இந்த புதிய சீர்திருத்தம் காரணமாக இனி இந்தப் பிரச்சினை மாநில அரசுகளின் கவனத்துக்குரியதாக மாறும். எண்ணெய் எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு EIA எனப்படும் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை தேவைப்படாது.
Comments