இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயுடன் அஜித் தோவல் சந்திப்பு
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்ட இலங்கை அதிபர், மிகுந்த இணக்கமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். இருநாட்டு உறவை பலப்படுத்துதல், தேசிய பாதுகாப்பு, உளவுத்துறை தகவல் பரிமாற்றம், கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் இச்சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாகவும் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்புத் துறைக்கு ஆயுதங்களை வாங்குவதற்காக 50 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கும் என்றும் அப்போது அஜித் தோவல் உறுதியுளித்துள்ளார்.
Comments