ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் PF பெற உரிமை உள்ளது - உச்சநீதிமன்றம் கருத்து
ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் இடையே வேறுபாடு கூடாது என்று வலியுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி தொகையை பெறும் உரிமை உண்டு என்பதை ஸ்தாபித்துள்ளது.
அவர்களுக்கும் எதிர்கால பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கில் பொதுத்துறை நிறுவனமான பவன் ஹன்ஸில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் தொழிலாளர் வைப்பு நிதியின் கீழ் கொண்டு வர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தொழிலாளர் சீர்திருத்த சட்டங்களில் மாற்றம் கொண்டு வர உள்ள மத்திய அரசு, உணவு டெலிவரி செய்வோர் உட்பட அனைத்து பிரிவினருக்கும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வர இருக்கிறது. இதற்கான வரைவு மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Comments