அறுவடைக்கு தயாரான சம்பா சாகுபடியில் புகையான் நோய் தாக்குதலால் நெற்கதிர்கள் நாசம்
நாகை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா சாகுபடியில் புகையான் நோய் தாக்குதலால் நெற்கதிர்கள் நாசம் அடைந்துள்ளன.
தேமங்கலம், அடி பள்ளம் ,வங்கார மாவடி ,கடம்பரவாழ்க்கை, பெருங்கடம்பனூர், சீயாத்தமங்கை, திருமருகல் உள்ளிட்ட இடங்களில் டிகேஎம் 13, சொர்ணா சப், பிபிடி உள்ளிட்ட நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கரில் தற்பொழுது புகையான் தாக்குதல் ஏற்பட்டு நெற்கதிர்கள் பதராக மாறியுள்ளது. கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள நிலையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், பாதிப்புகளை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேளாண் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments