உலகளவில் தலா 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள 4 நிறுவனங்கள்..
பன்னாட்டளவில், நான்கு நிறுவனங்கள், தலா ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பை கொண்டவையாக மாறியிருக்கின்றன. இவற்றில், மூன்று நிறுவனங்கள், அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், பில்கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனம், சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனமான அராம்கோ, மற்றும் கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பாபெட் ஆகியவை, தலா, ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்டவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள், தலா ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புடன், பட்டியலில், முதன்மை பெற்றிருக்கின்றன.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்குழுமத்தின், அனைத்து பங்குகளும், 8 விழுக்காடு அளவிற்கு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments