விழுங்கிய முட்டைகளை ஒவ்வொன்றாக கக்கிய நல்ல பாம்பு.. வீடியோ

0 1614

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் கூண்டில் கோழியை கொன்று முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு, மீண்டும் முட்டையை வெளியேற்றும் காட்சி வியப்பை ஏற்படுத்தியது.

அங்குள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட கோழி, முட்டைகளை அடைகாத்து வந்தது. இந்தநிலையில், கோழி கூட்டினுள் புகுந்த நல்ல பாம்பு ஒன்று, கோழியை கொன்றுவிட்டு அங்கிருந்த முட்டைகளை விழுங்கியது.

இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த பாம்பு ஆர்வலர் ஒருவர், பாம்பை லாவகமாகப் பிடித்தார். அப்போது, அந்தப் பாம்பு தான் விழுங்கிய முட்டைகளை ஒவ்வொன்றாக கக்கி வெளியேற்றியது. அதன்பிறகு அந்த பாம்பு காப்பு காட்டில் விடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments