போராட்டம் நடத்திய 86 இஸ்லாமியர்களுக்கு தலா 55 ஆண்டுகள் சிறை
தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து கிறிஸ்துவ பெண்ணை விடுவித்ததற்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம் நடத்திய 86 பேருக்கு தலா 55 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபில் இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி, தெய்வ நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஆசியா பீபி என்ற பெண் மீது வழக்குத் தொடரப்பட்டு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.
கிறிஸ்துவரான ஆசிய பீபீக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்தன.
இதில் வன்முறை நிகழ்த்தியதாக தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் கட்சியினர் உள்பட 86 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள பாகிஸ்தான் நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தலா 55 ஆண்டுகள் சிறைதண்டனையும் 12 லட்சம் அபராதமும் விதித்தது.
Comments