குடியரசு தினவிழாவை முன்னிட்டு காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

0 965

குடியரசு தினவிழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 26 மற்றும் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறும் 3 நாட்களுக்கும் சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 20, 22, 23 மற்றும் 26 ஆகிய 4 நாட்களுக்கு, காமராஜர் சாலையில் சாந்தோம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

அந்த சமயங்களில் அடையாறிலிருந்து பிராட்வே செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கீரின்வேஸ் சாலை சந்திப்பிலும், பிற வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை, கச்சேரி சாலை சந்திப்பு வழியாகவும் திருப்பிவிடப்பட உள்ளது.

மேலும் பிற வழித்தடங்களில் செய்யப்படும் மாற்றங்களும் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments