ரவுடி பினு ஸ்டைலில் வாளில் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சட்டகல்லூரி மாணவர்

0 1334

ரவுடி பினு ஸ்டைலில், வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சட்டகல்லூரி மாணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் கடந்த 11ஆம் தேதி இரவு, நடுரோட்டில், நண்பரின் பிறந்த நாளை கொண்டாடினர்.

பிறந்தநாள் பரிசாக, நண்பருக்கு பண மாலை அணிவித்து, மலர் கிரீடம் வைத்ததுடன், 4 அடி நீள வாளை பரிசாக வழங்கினர். தனக்கு பரிசாக வழங்கப்பட்ட வாளில் அந்த மாணவர் கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், அவர்களது பின்னணி குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments