பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் அடித்து கொலை - 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த போலீஸார்

0 981

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை அடித்து கொன்ற  2 பேரை துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கைது செய்தனர்.

சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் கைதாகி  ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், ஒருவன் தனது 2 கூட்டாளிகளுடன் சென்று சிறுமியின் தாயாரிடம் வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டினான். சிறுமியின் தாயார் மறுப்பு தெரிவிக்கவே, 3 பேரும் தாக்கினர்.

தாக்குதலில் காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதில் தொடர்புடைய 2 பேர் ஜஜ்மாவ் பகுதியில் ((Jajmau)) பதுங்கியிருப்பதை கண்டுபிடித்து போலீஸார் கைது செய்ய சென்றபோது  துப்பாக்கி சண்டை மூண்டது. துப்பாக்கி சண்டையில் 2 பேர் காயமடைந்து சுருண்டு விழவே, அவர்களை  போலீஸார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments