பிஸ்கட்டுக்கான ஜிஎஸ்டி அமைச்சர் சுவைபட விளக்கம்.!

0 926

தமிழ்நாட்டிற்கான ஐஜிஎஸ்டி நிலுவை தொகை 4 ஆயிரத்து 73 கோடி ரூபாயை உடனடியாக வழங்கவும், 64 பொருட்களுக்கும், 8 சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரப்பட்டிருப்பதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். பிஸ்கட் மீதான ஜிஎஸ்டி குறித்த சர்ச்சைக்கு, சுவைபட, அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

ஜிஎஸ்டி தொடர்பாக, டெல்லியில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, காணொலி காட்சி மூலம், அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது, தமிழ்நாடு அரசுக்கு, 2017-2018ஆம் ஆண்டில், மத்திய அரசு தர வேண்டிய ஐஜிஎஸ்டி நிலுவைத் தொகை, 4 ஆயிரத்து 73 கோடி ரூபாயை வழங்க வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டில் 64 பொருட்களுக்கும், 8 சேவைகளுக்கும், ஜிஎஸ்டியை குறைக்கவும், வரிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

சாப்பிடும் பிஸ்கட்டுக்கும், தங்க பிஸ்கட்டுக்கும் ஒரே வரி என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் சுவைபட விளக்கம் அளித்தார் எனது தொகுதியில் பல பட்டர் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன; அங்கு வரி கிடையாது என பதிலளித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments