சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க எதிர்ப்பு தெரிவிப்போரை அந்தமான் சிறைக்கு அனுப்ப வேண்டும்

0 1033

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க எதிர்ப்பு தெரிவிப்போரை சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருப்பது, மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சிவசேனாவின் நிலைப்பாடு என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போரை சாவர்க்கர் முன்பு அடைக்கப்பட்டிருந்த அந்தமான் சிறையில் 2 நாள் அடைத்து வைத்தால்தான், அவர் செய்த தியாகம், பங்களிப்பு தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.

ராவத்தின் இந்த பேட்டி மகாராஷ்டிர அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் காங்கிரஸுடனான கூட்டணி உறுதியாக இருப்பதாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராவத்தின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள வீர சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர், கடந்த காலங்களிலும் சாவர்க்கரை அவதூறாக பேசியதை சிவசேனா தீவிரமாக எதிர்த்தது. தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போதும் அதே நிலைப்பாட்டில் சிவசேனா உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

சாவர்க்கரை எதிர்க்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியை, சிவசேனா சமாதானப்படுத்தி விடும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments