ஆஸ்திரேலியாவில் கனமழை - வறட்சியின் தாக்கம் குறைந்தது
ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கடற்கரையோரம் வெளுத்து வாங்கிய கனமழையால் புதர்த்தீ மற்றும் வறட்சியின் தாக்கம் குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் கொளுந்துவிட்டு எரிந்த புதர்த்தீ வன உயிரினங்கள் மற்றும் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது. இந்த நிலையில் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பல இடங்களில் புதர்த்தீ கட்டுக்குள் வந்துள்ளது.
இதனிடையே நியூ சவுத் வேல்ஸில் உள்ள மோரேவில் இருந்து க்ரோப்பா க்ரீக்((Croppa Creek)) செல்லும் சாலையில் தாகமுற்ற கோலா ஒன்று, சாலையில் கிடக்கும் தண்ணீரை குடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வழியே காரில் சென்ற பெண் ஒருவர், நெஞ்சை உருக்கும் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
Comments