ஜம்மு காஷ்மீரில் அனைத்து சேவைகள் மீண்டும் துவக்கம்

0 706

5 மாத கால முடக்கத்திற்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் அனைத்து பிரி-பெய்டு செல்போன் இணைப்புகளுக்கும் குரல் மற்றும் குறுஞ்செய்தி வசதிகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று ஜம்முவின் 10 மாவட்டங்களிலும், காஷ்மீரின் குப்வாரா,பந்திப்போரா மாவட்டங்களிலும் 2 ஜி இணையதள சேவை சீரமைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதற்கு எதிராக தாக்கலான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இணையதள சேவைகளை மீண்டும் வழங்குவது பற்றி ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்குமாறு யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி, 6 மாவட்டங்களில் உள்ள ஹோட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு இணையதள சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments