திருமண தகவல் இணையதளங்களில் மோசடி - இளம்பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய இளைஞர் கைது

0 744

மும்பையில்  திருமண தகவல் இணையதளங்களில் ((matrimonial websites)) ஐஏஎஸ் அதிகாரி என பொய்யான தகவலை வெளியிட்டு 25 இளம்பெண்களை ஏமாற்றி லட்சகணக்கான ரூபாயை மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் ஏமாற்றி பண மோசடி செய்து விட்டதாக பெண் அளித்த புகாரின்பேரில் மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவில் என்ஜீனியரான ஆதித்ய ஹாத்ரே ((Aditya Mhatre)) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சமூகவலைதளங்கள், திருமண தகவல் மையங்களில் தம்மை ஐஏஎஸ் அதிகாரி என்றும், ஐபிஎஸ் அதிகாரி என்றும், பொய்யான தகவலை வெளியிட்டு, 25 இளம்பெண்களை ஏமாற்றியதும், 25 பேரிடமும் தலா 5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை மீட்கும் நடவடிக்கையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments