ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது மூதாட்டி வெற்றி
ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது மூதாட்டி ஒருவர், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ராஜஸ்தானில் 2 ஆயிரத்து 726 கிராம ஊராட்சிகள், 87 ஊராட்சி ஒன்றியங்களுக்கான முதற்கட்ட தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சிகார் மாவட்டத்தின் புரானாவாஸ் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வித்யா தேவி எனும் 97 வயது மூதாட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
843 வாக்குகளை பெற்ற அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 207 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். முன்னதாக 2 கி.மீ தூரம் நடந்து சென்று வேட்பு மனு தாக்கல் செய்த வித்யா தேவி, தான் ஆரோக்யமாக இருப்பதாகவும், மக்கள் சேவையாற்ற ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
Comments