தோனி ஏற்கனவே தன் கடைசி போட்டியில் விளையாடிவிட்டார்.! சொல்கிறார் ஹர்பஜன் சிங்

0 813

இந்திய அணிக்காக தோனி மீண்டும் விளையாடுவார் என தாம் நம்பவில்லை என்று, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் தோனி இடம்பெறாத நிலையில், விரைவில் அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை பெறுவார் என தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பிரகாசிக்க, தீவிர பயிற்சியில் தோனி ஈடுபட்டு வருகிறார். இதில் தனது பார்மை மீட்டெடுத்து, டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார் என ரசிகர்கள் மிகுந்த ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஹர்பஜன், தோனி மீண்டும் நீல நிற ஜெர்சி அணிந்து இந்தியாவிற்காக விளையாடுவார்  என்று யாரும் எதிர்பார்க்காதீர்கள் என கூறியுள்ளது தோனி ரசிகர்களை மேலும் கவலைப்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள தோனி, அதில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் மீண்டும் அவர் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பில்லை என்றே நான் நினைக்கிறேன். பிசிசிஐ-யின் ஒப்பந்த பட்டியலில் தோனி இடம் பெறாததை கண்டு நான் அதிர்ச்சி அடையவில்லை.

எனக்கு தெரிந்த வரையில் ஓய்வு குறித்து அவர் அறிவிக்கும் முன்பே தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடி விட்டார் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவர் 2019 உலக கோப்பை வரை தான், அணியில் இருப்பது என்ற முடிவை எடுத்திருந்தார்.

எனவே அதேற்கேற்றவாறு தனது மனதை அவர் தயார்படுத்தி வைத்திருக்க கூடும். அதனால் தான் அவர் நீண்ட நாட்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார் என ஹர்பஜன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments