இலங்கை வர ரஜினிக்கு தடையில்லை...! - நமல் ராஜபக்சே
நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கை அரசு விசா தர மறுத்ததாக கூறப்படும் தகவல் பொய்யானது என அந்நாட்டு பிரதமரான மகிந்த ராஜபக்சேவின் மகன், நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இலங்கை செல்ல அந்நாட்டு அரசு விசா தர மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மகிந்த ராஜபக்சேவின் மகனும் எம்.பியுமான நமல் ராஜபக்சே, ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை என தெரிவித்துள்ளார்.
தானும் தனது தந்தையும் ரஜினியின் திரைப்படங்களுக்கு பெரும் ரசிகர்கள் என தெரிவித்துள்ள அவர், ரஜினி இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Comments