சூரியனை ஆய்வு செய்ய விரைவில் “ஆதித்யா” செயற்கைகோள்
சூரியனை ஆய்வு செய்வதற்கு ஆதித்யா செயற்கைகோளை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீஹரிகோட்டா சத்திஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் ராஜராஜன் கூறினார்.
புதுச்சேரி உப்பளம் பெத்தி செமினார் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவர்களிடையே உரையாற்றிய அவர், நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜராஜன், சூரியனின் தன்மை மற்றும் பல்வேறு செயல்பாடுகளை ஆதித்யா செயற்கைகோள் ஆய்வு செய்யும் என்றார். குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்த பின் ஏவுதளம் அமைக்கும் பணி துவக்கப்பட்டு ஓராண்டில் முடிக்கப்படும் என்றார்.
புதிதாக அமைக்கப்பட உள்ள ஏவுதளத்திலிருந்து விரைவாகவும், குறைந்த செலவிலும் ராக்கெட்டுகளை ஏவ முடியும் என்றார்.
Comments