தேநீர் தயாரிப்புக்கு ரயிலை சுத்தப்படுத்தும் தண்ணீர்
சென்னை எக்மோர் ரயில் நிலைய கடை ஒன்றில், ரயில் டேங்குக்கு செல்லும் தண்ணீரை பிடித்து பாய்லரில் ஊழியர் ஒருவர் ஊற்றும் வீடியோ வெளியானதால், அக்கடை உடனடியாக மூடப்பட்டது.
7ஆவது பிளாட்பாரத்தில் முகமது அக்பர் என்பவரால் உரிமம் எடுத்து நடத்தப்படும் கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ரயில் டேங்குக்கு செல்லும் தண்ணீரை பிடித்து வந்து, அடுப்பில் இருக்கும் பாய்லரில் ஊற்றுகிறார். இதை அங்கிருந்த பயணி ஒருவர் ரகசியமாக வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலாக பரவியதும், விசாரணை முடிவடையும் வரை கடையை மூட ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ் உத்தரவிட்டதையடுத்து அக்கடையை அதிகாரிகள் பூட்டு போட்டு மூடினர். மேலும் ரயில்வே தரப்பிலும் விளக்கம் அளித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
Comments