இலங்கையில் ட்ரோன்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கம்

0 668

இலங்கையில் ட்ரோன்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, அந்நாட்டு அரசு விலக்கிக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஈஸ்டர் தின பண்டிகையின்போது இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில், 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக, ட்ரோன்கள் மற்றும் ஆள் இல்லா விமானங்கள் வான் பரப்பில் பறக்க, இலங்கை விமான போக்குவரத்து ஆணையம் ஏப்ரல் 25ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது.

தாக்குதல் நடந்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இலங்கையில் தற்போது இயல்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ட்ரோன்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, இலங்கை விமான போக்குவரத்து ஆணையம் விலக்கிக்கொண்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments