60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளி தாக்குதலால் 3.6 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் கடும் பாதிப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள வெட்டுக்கிளி தாக்குதலால், சுமார் 3.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் தெற்கு பாகிஸ்தான் பகுதியிலிருந்து பறந்து வந்த இளஞ்சிவப்பு நிற வெட்டுக்கிளிகளால் முதல் முறையாக ஏற்பட்ட பாதிப்பைக் காட்டிலும், தற்போது ஏற்பட்டுள்ள தாக்குதல் மோசமானதாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வெட்டுக்கிளிகள் முழுப்பயிரையும் உண்ணாவிட்டாலும், மலர்களை உண்பதால் கோதுமை, பருப்பு வகைகள், சீரகம், கடுகு உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீகங்காநகர் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹனுமன்கர், பைகனேர், ஜெய்சால்மர், பர்மீர், ஜோத்பூர் உட்பட மேலும் 9 மாவட்டங்களும், வெட்டுக்கிளி தாக்குதலால் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.
Comments