தாலுகாக்கள் தோறும் கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலனை
நாடு முழுவதும் தாலுகாக்கள் தோறும் கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளை திறப்பது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கும்படி மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் பிறப்பித்த உத்தரவில், இது அரசின் கொள்கை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பள்ளிகள் எங்கு திறக்கப்பட வேண்டும் என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்று குறிப்பிட்டது.
இருப்பினும், தாலுகாக்கள் தோறும் கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளை திறப்பது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Comments